Monday, April 2, 2012

எனது குரு ராதிகா ராமசாமி - மல்லிகை மகள் பேட்டி

எனது குரு ராதிகா ராமசாமி - மல்லிகை மகள் பேட்டி





Saturday, March 13, 2010

India Ink - போட்டோ ஷாப் நீட்சி - கமல்

India Ink - போட்டோ ஷாப் நீட்சி - கமல்

இந்தியன் இங்க் என்பது ஓவியத்துறையில் மிக பிரபலமான இங்க் மற்றும் தொழில்நுட்பம் உதாரணம் கீழ் உள்ள இந்த படத்தை பாருங்கள்...

இதை நாம் எடுக்கும் புகைப்படத்தை இவ்வாறு மாற்றலாம்

நம்ம சினேகா அக்காவை உதவிக்கு அழைத்துக் கொள்வோம்.

இது அசலான சினேகா அக்கா.


முதலிலில் INDIA INK உங்களின் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள். Photoshop உள்ள போல்டரில் நிறுவப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்ளவேண்டும்.

இந்த புகைப்படத்தை Photoshopல் திறந்து கொண்டு, Filter => Flaming Pear => India Ink.. கிளிக் செய்யவும் கீழ்கண்டவாறு வரும்...

கீழ் கண்டவாறு ஒரு விண்டோ வரும்


அதில் Styleயை கிளிக் செய்தால் பல வகைகள் வரும் அதில் Noise தேர்வு செய்து அடுத்தது,

Angle க்கு அடுத்தாக உள்ள Command Buttonஐ கிளிக் செய்தால் பல வகைகள் வரும் அதில் Normal என்பதை கிளிக் செய்து OK செய்ய வேண்டும்.



இப்போது சீழ்கண்டவாறு வரும்.



இதை சார்ட் பேப்பர் / J.K. போர்டு / 250 GSM உள்ள திக் அட்டையில் INJECT PRINTERல் பிரிண்ட் செய்தால் மிக அழகாக இருக்கும். வீட்டில், அலுவலகத்தில் மற்றும் பிடித்த அனைத்து இடங்களிலும் மாட்டிக்கொள்ளலாம்...

இப்படி...


இது போல மற்ற பிரிவுகளில்

Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Bright


Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Lighter

Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Dry


Style : Noise & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Hot


Style : Diffusion & Angleக்கு அடுத்தாக உள்ள Command Button : Normal


சரி அனைத்தும் நன்றாக இருக்கா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

சரி ஓவரா மொக்கபோட்டா சீனியர்கள் எல்லாம் கோவிச்சிக்க போராங்க வரட்டா...

அடுத்த பதில் புதிய செய்தியுடன் வருகிறேன்...

Monday, March 8, 2010

ஜனவரி மாதம் - 2வது இடத்தின் செய்முறை - கமல்

வணக்கம் நண்பர்களே!


ஜனவரி மாதம் புகைப்படப் போட்டியில் 2வது இடத்திற்கு தேர்வு செய்த PiT உறுப்பினர்களுக்கு நன்றிகளுடன் தொடங்குகிறேன்.

இந்த புகைப்படம் சென்னை, மயிலாப்பூரில் அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாடியில் நின்று கோயில் கோபுரத்தை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது பின் பக்கம் கிணற்றின் மேல் எதார்த்தமாக திரும்பிய போது எனது கண்களில் விழுந்தது இந்த பூனை.

அங்கிருந்து எடுத்த இந்த புகைப்படம்



எனக்கு முழுமை அடையவில்லை, எனவே மிக வேகமாக கீழே இறங்கி சென்று பூனை நகர்வதற்குள் எடுத்த புகைப்படங்கள்


PiTயில் சிறுகதை போட்டி அறிவிப்பு வந்த சில நாட்கள் கழித்து, இந்த புகைப்படம் இந்த தலைப்புக்கு சரியாக வரும் என்று தோன்ற அதை போட்டோ ஷாப்பில் மாற்றியவை


1. முதல் படத்தில் Auto Levels கிளிக் செய்து வண்ணத்தை மெறுகேற்றினேன்.

2. குறுக்கே உள்ள முன்னடி உள்ள இரும்பு கம்பியையும், பின்னால் உள்ள குச்சியையும் Clone Stamp Tool மூலம் அகற்றினேன். பின் கண்ணை Paths மூலம் தேர்வு செய்து Image => Adjustments => Variations சென்று நீல நிறத்தை ஏற்றினேன்.



3. இரண்டு கண்களும் வண்ணம் மாற்றப்பட்டது.

கடைசியாக சிறு கதையின் தலைப்பு இணைக்கப்பட்டு PiTக்கு அனுப்பப்பட்டு 2வது இடத்தை பிடித்தது.


நமது தளத்தை கண்டு பிடித்த 4 நான்கு மாதங்களில் ஒவ்வொரு பதிவையும் கவனமாக படித்து, பரிச்சை செய்து பார்த்து, என்னை தரமேற்றிக் கொண்டேன். அதில் முதல்படி சில்லவுட் போட்டியில்தான் முதலில் கலந்து கொண்டேன்.

அதில் நான் வடபழனி முருகன் கோயிலை எடுத்த புகைப்படம் இறைச்சல் அதிகமாக இருந்தது.


என்ன காரணம் என்று அப்போது தெரியவில்லை. அந்த படத்தில் பின்னூட்டத்தில்

நம்ம நண்பர் Prem அவர்கள் கீழ்கண்டவாறு பதித்திருந்தார்.

a small tip:

please note ISO 400 and the resulting noise

athey neram shutter speed 1/2000

ISO kuraichu, shutter speed kuracihu intha shot eduthirukkalam...romba nalla vanthirukkum....other wise it is an excellent composition....

அப்போதுதான் ISO பற்றி முழுமையாக புரிந்துக் கொண்டேன்.

காசிமேட்டை முதலில் எடுத்த புகைப்படம்.



நண்பர் Prem சொன்ன பின்பு மீண்டும் அங்கு சென்று எடுத்த புகைப்படம்



இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்தற்கு மிக முக்கிய காரணமே PiT தளம்தான். சமீபத்தில் என்னுடைய அலுவலகத்தில் நான் எடுத்த மேக்ரோ புகைப்படத்தை எனது பாஸ் பார்த்துக் கொண்டே சென்றவர் திரும்பி வந்து கை கொடுத்து மிக அருமையாக எடுத்திருக்கே என்று சொல்லிவிட்டு சென்றார்.

அந்த இன்ப அதிர்ச்சியில் சில நிமிடங்கள் உறைந்து போனது என்னமோ நிஜம்.

ஏன் இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால், சற்றே ஆர்வம் + முயற்சி இவற்றுடன் முழுமையாக நமது PiT தளத்தை முழுமையாக படித்தால் போதும். அவர் முழு தகுதி உடைய புகைப்பட கலைஞர் ஆகிவிடுவார்கள்.

இதை கண்ணும் கருத்துமாக பராமரித்து வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி...

ஏற்கனவே எனது தேவதையை பற்றி சொல்லியிருக்கிறேன். மிக முக்கியமான பங்கு உண்டு என்னுடைய இந்த பரிமான வளர்ச்சிக்கு... அதற்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதற்கு பலனாக காலம் முழுவதும் அன்போடு வைத்துக்கொள்ளவேண்டும்.

எனவே இந்த தொகுப்பை எனது தேவதைக்கும், நமது PiT தளத்திற்கும் காணிக்கையாக்குகிறேன். மிக்க நன்றி...

மீண்டும் வருவேன்... புதிய செய்தியுடன்...

Saturday, January 16, 2010

Noise reduction - நீட்சி உபயோகித்த படம்


Noise reduction - பயன் படுத்தும் முன்பு உள்ள படம்

Noise reduction - உபயோகித்து இரைச்சலை குறைத்த பின்பு

முழு அளவில் பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்

மிகவும் அருமையாக இருக்கிறது. மிகவும் உபயோகமான நீட்சி. பயன்படுத்தி பார்த்தால் பிரம்மாண்டமாய் இருக்கிறது நன்றி நாதஸ் அவர்களே...

மற்றும்

மிக்க நன்றி PiT இணையில்லா இணையதளத்திற்கு

Sunday, November 1, 2009

பொம்மை

பொம்மை போட்டிக்காக எடுத்த மேலும் சில புகைப்படங்கள்...




இந்த விநாயகர்தான் கலந்து கொண்டு முதல் 15ல் வந்தவர்...

மற்றோரு பொம்மை கண்ணன் ஆனால் சில காரணங்களால் இதை அனுப்பவில்லை...


மற்றோரு விநாயகர் கிரிஸ்டல் பொம்மை


யானை சிலை இது பொம்மையில் வராது...


தங்க நிற நாய் பொம்மை